Monday, May 20, 2013

தமிழ் திரைப்பட விழாவில் மௌனராகம்


அண்மையில், யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் இந்தியத் துணைத் தூதரகம் நடாத்திய தமிழ்த் திரைப்பட விழாவில் கலந்துகொண்டேன். திரையிடலுக்குத் தெரிவு செய்யப்பட்ட படங்கள் தமிழின், குறிப்பிடத்தகுந்தவை தானேயொழிய சிறந்தவையாகக் கொள்ள முடியவில்லை. (தமிழின் சிறந்த படங்களாக எவற்றை, எத்தனையைத் தெரிவு செய்ய முடியுமென்பது வேறு விடயம்.) மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படமும் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் திரையரங்கில் அகலத்திரையில் பார்க்கும் அனுபவத்திற்காக, திரும்பவும் பார்த்தேன்.   

 நல்ல இசை கொண்ட பாடல்களை இப் படம் கொண்டிருக்கிறது. எனினும் பின்னணி இசையானது படத்தின் பின்னடைவிற்கான காரணிகளில் ஒன்றாகி விடுகிறது. இருந்தாலும் இளையராஜாவின் இசை ஆளுமை சாதாரணமானதல்ல.  

 பாடல்களைத் திரைப்படங்களில் நல்லபடியாகக் கையாளும் போக்கிற்கும், திரைப்பட ஊடகத் தன்மைக்குப் பொருத்தமற்ற வகையில்  கையாளும் போக்கிற்குமான உதாரணங்களை இப் படத்திலேயே காட்ட முடியும்.

http://www.youtube.com/watch?v=bKy6lO-TJvw
http://www.youtube.com/watch?v=VQXxuvRml8M
http://www.youtube.com/watch?v=4UopH1orFhc
http://www.youtube.com/watch?v=ofVnjzqy6cE
http://www.youtube.com/watch?v=WHzkEVeH30A


 மையப் பாத்திரமாக வரும் ரேவதி, மற்றும் மோகன், கார்த்திக் ஆகியோரது நடிப்பும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இப் படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள்.

 இப் படத்தோடு தொடர்புடைய நடிகை ரேவதி, நடிகர் மோகன், படத்தொகுப்பாளர் லெனின் போன்றோரை சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் (சென்னை) சந்தித்து உரையாட முடிந்தது. நடிகை ரேவதி, தன்னை ஒரு இயக்குநராகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர். 

படத்தொகுப்பாளரும் இயக்குநருமான லெனினுடன்

சென்னை திரைப்பட விழாவில்

சென்னை திரைப்பட விழாவில்

 நடிகர் மோகனுடன்


நடிகையும் இயக்குநருமான ரேவதியுடன்

     

என்னோடு உரையாடிக்கொண்டிருந்த நடிகை ரேவதி, எனது தமிழ் உரையாடல் மிகவும் வசீகரமானதாக, இனிமையானதாக இருப்பதாகச் சொன்னது நினைவிற்கு வருகிறது. மௌனராகம் படத்தில் மையப்பாத்திரமாக நடித்ததின் மூலம் நல்ல கலை அனுபவத்தை வழங்கிய அவருக்கு நன்றியைப் பதிவு செய்கிறேன்.


பாலுமகேந்திராவின் வீடு


              
             ஒரு தமிழ்த் திரைப்பட விழாவில், அண்மையில் கலந்துகொண்டேன். திரையிடலுக்குத் தெரிவு செய்யப்பட்ட படங்கள் தமிழின், குறிப்பிடத்தகுந்தவை தானேயொழிய சிறந்தவையாகக் கொள்ள முடியவில்லை. பாலுமகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை என்ற படமும் காட்சிப்படுத்தப்பட்டது. (இதனை விட அவரது சந்தியா ராகம், வீடு ஆகியவை பலவகைகளில் முக்கியமானவை) மூன்றாம் பிறை படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் திரையரங்கில் அகலத்திரையில் பார்க்கும் அனுபவத்திற்காக, திரும்பவும் பார்த்தேன்.

இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுடன் 



      
தமிழின் முக்கியமான இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. அவர் சென்னையின் சாலிக்கிராமத்தில் 'வீடு ' திரைப்படத்தை எடுக்கப் பயன்படுத்திய வீட்டையே சினமா பள்ளியாக்கியுள்ளார். (சினமா பட்டறை) அங்கே அவரைச் சந்தித்து பல விடயங்களையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது. டிஜிரல் தொழில் நுட்பத்தில்,HDSLR  கமெராவினால் தனது புதிய திரைப்படத்தினை உருவாக்க முயல்வது பற்றிக் கூறினார். அப்போது நான் ஒரு குறும்படத்திற்கு  HDSLR கமெராவினால் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தேன். (எனது நண்பரான குகன் என்பவர், உலகிலேயே முதல் முறையாக  HDSLR  கமெராவினால் முழு நீளத் திரைப்படத்தை உருவாக்கி, லிம்கா என்ற 'உலக சாதனைப் பதிவுப்' புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.) 

இயக்குநர் பிரசன்ன விதானகே யின் திரைப்படத்தில் நான் பணியாற்றுவதை அறிந்து சந்தோசப்பட்டு, பிரசன்னவை  சந்தித்தது பற்றியும், அவரது முக்கியத்துவம் பற்றியும் கூறினார் பாலுமகேந்திரா. இப்போது தனது புதிய திரைப்படத்துடன் (With You Without You) 'பயணித்துக்கொண்டிருகிறார்' நண்பர் பிரசன்ன விதானகே.