Monday, May 20, 2013

பாலுமகேந்திராவின் வீடு


              
             ஒரு தமிழ்த் திரைப்பட விழாவில், அண்மையில் கலந்துகொண்டேன். திரையிடலுக்குத் தெரிவு செய்யப்பட்ட படங்கள் தமிழின், குறிப்பிடத்தகுந்தவை தானேயொழிய சிறந்தவையாகக் கொள்ள முடியவில்லை. பாலுமகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை என்ற படமும் காட்சிப்படுத்தப்பட்டது. (இதனை விட அவரது சந்தியா ராகம், வீடு ஆகியவை பலவகைகளில் முக்கியமானவை) மூன்றாம் பிறை படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் திரையரங்கில் அகலத்திரையில் பார்க்கும் அனுபவத்திற்காக, திரும்பவும் பார்த்தேன்.

இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுடன் 



      
தமிழின் முக்கியமான இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. அவர் சென்னையின் சாலிக்கிராமத்தில் 'வீடு ' திரைப்படத்தை எடுக்கப் பயன்படுத்திய வீட்டையே சினமா பள்ளியாக்கியுள்ளார். (சினமா பட்டறை) அங்கே அவரைச் சந்தித்து பல விடயங்களையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது. டிஜிரல் தொழில் நுட்பத்தில்,HDSLR  கமெராவினால் தனது புதிய திரைப்படத்தினை உருவாக்க முயல்வது பற்றிக் கூறினார். அப்போது நான் ஒரு குறும்படத்திற்கு  HDSLR கமெராவினால் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தேன். (எனது நண்பரான குகன் என்பவர், உலகிலேயே முதல் முறையாக  HDSLR  கமெராவினால் முழு நீளத் திரைப்படத்தை உருவாக்கி, லிம்கா என்ற 'உலக சாதனைப் பதிவுப்' புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.) 

இயக்குநர் பிரசன்ன விதானகே யின் திரைப்படத்தில் நான் பணியாற்றுவதை அறிந்து சந்தோசப்பட்டு, பிரசன்னவை  சந்தித்தது பற்றியும், அவரது முக்கியத்துவம் பற்றியும் கூறினார் பாலுமகேந்திரா. இப்போது தனது புதிய திரைப்படத்துடன் (With You Without You) 'பயணித்துக்கொண்டிருகிறார்' நண்பர் பிரசன்ன விதானகே.



 

No comments:

Post a Comment