இயக்குநரும்
நடிகருமான மணிவண்ணன் திரைக்கதை,வசனம் அமைத்து இயக்கியிருந்ததாலும், இயக்குநரும்
நடிகருமான சுஹாசினி நடித்திருந்ததாலும்
கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், பொறுமையுடன் இருந்து அண்மையில்
பார்த்து முடித்தேன்.
அறிமுகப் பாடகர் கிருஸ்ணச்சந்தரும்
ஜானகியும் பாடிய, நல்ல இசை கொண்டிருந்ததால் நீண்டகாலத்துக்கு
முன்னரேயே எனக்குப் பிடித்திருந்த,
பூவாடைக் காற்று...என்று தொடங்கும் பாடலையும் (படத்தில் இப் பாடல் நேர்த்தியாகக்
கையாளப்பட்டிருக்கவில்லை.) சுஹாசினியின் அப்பாவித்தனமான நடிப்பையும் தவிர,
படத்தில் வேறெதுவும் குறிப்பிடும் படியாகத் தோன்றவில்லை. நெஞ்சத்தைக் கிள்ளாதே
என்ற படத்தின் மூலமாக, இயக்குநர் மகேந்திரனால் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டு,
நல்ல நடிகையாக அறியப்பட்டவர் சுஹாசினி
 |
இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனுடன் |
தமிழகத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு, இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனைச்
சந்தித்த போது மிகவும் தளர்ந்து போயிருந்தார். (விபத்து ஒன்றில் சிக்கி சரியாக
நடக்கமுடியாமலிருந்தார்.) நீண்ட நேரம் உரையாடினார். ஈழத்தில் ஒரு படம் இயக்கவென
முயற்சி செய்திருந்தார். (அதற்காக வன்னி மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு விஜயம்
செய்திருந்தார்.) அந்த முயற்சி கைகூடாமல் போனமைக்காக மிகவும் வருந்தினார். இப்போது
ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். நல்ல படம் வருதோ இல்லையோ... ஒரு நல்ல மனிதர்
இயங்கிக்கொண்டிருக்கிறார் என்பது சந்தோசம்.
 |
இயக்குநரும் நடிகருமான சுஹாசினியுடன் |
No comments:
Post a Comment